எனது ஓவிய முயற்சிகள்

நண்பர்களுக்கு வணக்கம், எனது நாடகப்பணிகள் மற்றும் சிறிய அளவிலான சமூக பணிகளுக்கு மத்தியில் அவ்வப்போது வரைந்த ஓவியங்களை எங்கள் கட்டியக்காரி கலைக்குழுவின் முதல் நாடக ஆக்கம் “மொளகாப்பொடி” அரங்க நிகழ்வின் போது காட்சிக்காக வைத்திருந்தோம்.. பார்வையாளர்கள் மத்தியில் நல்ல விமர்சனங்களை அவை தந்தது. தற்போது சந்தித்து வரும் எனது பொருளாதார நெருக்கடியின் காரணமாக இவ்வோவியங்களை விற்பனை செய்ய் விரும்புகிறேன்.. ஓவியங்களுக்கான் கண்ணாடி மற்றும் ப்ரேம் செலவு மற்றும் போக்குவரத்து செலவு படம் ஒன்றுக்கு 1000/- ஆனது மேலும் இதற்கான கண்காட்சியின் போது ஒளிஅமைப்பு மற்றும் கலை அமைப்பிற்கான செலவு 16,000/- ஆனது இவற்றை கவனத்தில் கொண்டு குறைந்தது ஒரு ஓவியத்திற்கு 4,000/- ஆரம்ப விலையாக நிர்ணயித்துள்ளேன்.. ஆர்வமுள்ள நண்பர்கள் கீழ்காணும் பதினோரு ஓவியங்களில் தங்களுக்கு விருப்பமான ஓவியங்களை தேர்வு செய்து தங்களுக்கு விருப்பமான விலையை தெரிவித்தால் 10 நாட்கள் கழித்து அதிக விலை தெரிவித்த நண்பர்களுக்கு விற்பனை செய்யலாமென எண்ணியுள்ளேன்... ( மெயில் அல்லது பதிலிடும் போது தவறாமல் ஓவியத்தின் தலைப்பையும் குறிப்பிட வேண்டுகிறேன் ) தங்களின் சிறு உதவி எனது சமூகப்பணிக்கும், நாடகப்பணிக்கும் உறுதுணையாக இருப்பதோடு தொடர்ந்து வரைவதற்கும் எனக்கு ஊக்கமளிக்கும் எனவே அன்பர்களை உரிமையோடு கேட்டுக்கொள்கிறேன். நன்றி!! தொடர்புக்கு +91 99944 36973 livsmile@gmail.com எனது ஓவிய முயற்சிக்கு முழு பொருளாதார உதவி செய்த தோழர் ஸ்ரீஜித் சுந்தரம், எனது ஓவியத்தை முதலில் விலை குடுத்து வாங்கியதோடு இணையத்தில் விற்பனை செய்ய அறிவுருத்திய கீதா, இளங்கோவன் தம்பதியினருக்கு எனது அளவுகடந்த அன்பும் நன்றியும்... I am my Body Female Power You Me and Buddha Blessing Herself Beast in Me You think a girl just this Wind What is She Vithusagi Theettu Beauty and the Beast

3 நண்பர்கள் புன்னகையை பதித்துள்ளனர்:

ரவி said...

நல்ல முயற்சி ஸ்மைல். ஓவியத்தின் அளவு பற்றிய தகவல் பதிவில் இல்லையே ? ப்யூட்டி அண்ட் த பீஸ்ட் எனக்கு பிடிச்சிருக்கு. புக் பண்ணிட்டேன் இப்பவே.

லிவிங் ஸ்மைல் said...

எனது மெயில் முகவரி பிழையாக இருந்தது திருத்திவிட்டேன்.

livsmile@gmail.com

Beauty and Beast பெற்ற நண்பர் செந்தழல் ரவிக்கும், எனது ஓவியங்களை இதழுக்கு பயன்படுத்த முன்வந்த வல்லினம் இணைய இதழுக்கும் நன்றி!!..

jeeva said...

arumai